அமெரிக்காவின் உளவு நிறுவனம் சிஐஏ. இது தன்னுடைய கடந்த 1950-1973 வரையிலான செயல்பாடுகளை ‘the family of Jewels’ என்ற பெயரில் தகவல் பெறும் உரிமை விதியின் (RTI) படி வெளியிட்டுள்ளது. 700 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பல தலைவர்களை கொலை செய்ய முயன்றது, சட்ட விரோதமாக ஆட்களை கடத்தியது, தன் சொந்த நாட்டிலேயே தொலைபேசி ஒட்டக் கேட்டது, ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டு தலைவரை கொல்ல திட்டமிட்ட சதி போன்ற செயல்கள் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டள்ளன.
பிடல் கேஸ்ட்ரோ ஜனவரி,1959-ல் புரட்சியின் மூலம் கியூபாவைக் கைப்பற்றினார். பிடல் கேஸ்ட்ரோ ஒரு பொதுவுடமைவாதி.(!?) இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட், 1960-ல், தன் சிஐஏ மூலம் அவரைக் கொல்ல சதி செய்தது.
சிஐஏ தனது முன்னால் ஏஜென்ட் ஒருவரை அழைத்து, ஜானி ரோஸாலி என்ற நிழல் உலக தாதாவை நியமித்து 6 விஷ மாத்திரை கொடுத்து கொல்ல சதி செய்தது. இதற்காக 150,000 யுஎஸ் டாலர் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சிஐஏ தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ஆனால் கியுபா அவற்றை முடியடித்தது. ‘கேஸ்ட்ரோவை கொல்ல பல முறை அமெரிக்கா முயன்றதாகவும், தற்போதைய அதிபர் புஷ்ஷூம் முயல்வதாகவும்’ கியூபா குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது ‘அமெரிக்கா முன்னால் அதிபர் ஜான் கென்னடியை 1963-ல் கொன்றது சிஐஏ மற்றும் கியுபாவிலிருந்து தப்பித்தவர்களுமே ஆவார்கள்’ என கேஸ்ட்ரோ கூறியுள்ளார்.
80 வயதான கேஸ்ட்ரோ, கடந்த ஒரு வருடமாக நோய்வாய்ப் பட்டுள்ளார். இவரது நோய்க்கு ஏன் சிஐஏ காரணமாக இருக்கக் கூடாது. இவர் மக்கள் மத்தியில் தோன்றி பல மாதங்கள் ஆகின்றன. தற்போது கியூபாவை அவரது தம்பி ராவுல் ஆட்சி செய்கிறார்.
இதெல்லாம் கடந்த கால தவறுகள், தாங்கள் இப்போது திருத்திக் கொண்டதாகவும் சிஐஏ கூறுகிறது. ஆனால் தற்போது இதைவிட மோசமான செயல்களில் சிஐஏ ஈடுபடுவதாகவும், தன்னைக் கொல்ல பலமுறை புஷ் உத்திரவிட்டிருப்பதாகவும் கேஸ்ட்ரோ கூறியுள்ளார்.
Monday, July 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment