Monday, October 29, 2007

இந்தியாவின் பொருளாதரத்தை உயர்த்தும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்

இந்தியாவின் பொருளாதரத்தை உயர்த்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. சுமார் ஒரு கோடி பேர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இவர்களில் 50 சதவீதம் பேர் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 2006-ல் மட்டும் 25.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணத்தை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளார்கள். இது இந்தியாவிற்கு, வருமான வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகம். இந்தியாவிற்கு வரும் நேரடி வெளிநாட்டு முதலீட்டைவிட 3 மடங்கு அதிகம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.