Sunday, July 15, 2007

மூன்றாவது அணியின் தேர்தல் புறக்கணிப்பு-ஜனநாயக விரோதமா?

ஜூலை 19-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலை, மூன்றாவது அணி (UPNA) புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவிருக்கும் துணை குடியரசு தலைவர் தேர்தலில் தங்களது சொந்த வேட்பாளரை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. இல்லாவிட்டால் மத்திய அரசுக்கான ஆதரவை இடது சாரி கட்சிகள் திரும்ப பெற்றால், அதனது வேட்பாளரை ஆதரிக்கவும் மூன்றாவது அணி முடிவு செய்துள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் NDA, UPA இரண்டையும் ஆதரிக்கப் போவதில்லை என ஜெயா அறிவித்துள்ளார்.
மூன்றாவது அணியில் ஜெயா, சந்திர பாபு, முலாயம் சிங் மற்றும் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோர்கள் கைகோர்த்துள்ளார்கள்.

இப்படி தேர்தலை புறக்கணிப்பது சட்ட விரோதம் அல்ல என ஜெயா கூறியுள்ளார். ஆனால் ஜனநாயக விரோதம் என சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பரதன் போட்டியிடலாம் என சிபிஎம் தெரிவத்துள்ளது.


10,98,882 வாக்கு மதிப்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு மதிப்பு மூன்றாவது அணியிடம் உள்ளது.