ஜூலை 28, ஆந்திராவில் கம்பம் மாவட்டத்தில் மோனுகொண்டாவில், மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண், 8 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
சிபிஐ-எம் சார்பில் நிலங்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், பந்த நடந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண், 8 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சிபிஐ-எம், ஆந்திரா முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
கடந்த மார்ச் 14-ம் தேதி சிபிஐ-எம் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் நந்திகிராமத்தில், டாடாவின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
மக்களை சுட்டுக் கொல்வதில் அரசியல் கட்சிகளிடையே எந்த கொள்கை வேறுபாடும் கிடையாது.
Saturday, July 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment