இந்தியா தொலை தொடர்பு ஆணையம் ஜூன் 25-ம் தேதி கீழ்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 18.513 (ஜூன் 07 வரை) கோடி பேர். ஜூன் மாதம் மட்டும் 73.4 லட்சம் பேர் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய சந்தாதாரராகியுள்ளனர். மே மாதம் 65.7 லட்சம் சந்தாதாரராகியுள்ளனர். கடந்த சில மாதங்களாக லேண்ட்-லைன் தொலைபேசி சந்தாதாரர்கள் குறைந்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.
கார்டனர் சர்வே, 2011-க்குள் 46.2 கோடி பேர் செல்போன் பயன்படுத்துவார்கள் என முன்னுரைத்துள்ளது. புதிய சந்தாதாரர்கள் கிராமப்புறங்களிலிருந்து வருவார்கள் எனவும், செல்போன் விலை ரூ 800 ஆக இருக்கும் எனவும் அது முன்னுரைத்துள்ளது.
Saturday, July 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment